த கிரேட் கான்ட்ரவர்சி திட்டம் 2.0
2023, 2024 ஆம் ஆண்டுகளில் இயேசுவின் வருகைக்காக ஆயத்தப்பட இலட்சக்கணக்கான பிரதிகள் விநியோகத்தில் எங்களோடு இணைந்துகொள்ளுங்கள்.


எலன் ஜி. ஒய்ட்
செவந்த்-டே அட்வெண்டிஸ்ட் திருச்சபையின் இணை நிறுவனர்
என் மற்ற புத்தகங்களைவிட ‘த கிரேட் கான்ட்ரவர்சி’ எனும் இந்தப் புத்தகம் பரவலாகச் செல்வதைக் காண நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். ஏனெனில், உலகத்திற்கான எச்சரிக்கையின் கடைசிச் செய்தி எனது மற்ற புத்தகங்களைவிட இந்தப் புத்தகத்தில் மிகத்தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
பதிவிறக்கங்கள்
மொழிகள்
தாமதமின்றி இந்த புத்தகத்தை உலகின் ஒவ்வொரு பகுதியிலும் விநியோகிக்கவேண்டும் என்பதற்காக இதை எழுதுமாறு தேவன் என்னை ஏவினார். ஏனென்றால், கர்த்தருடைய நாளில் நிற்க ஒரு மக்களைத் தயார்படுத்துவதற்கு இதில் உள்ள எச்சரிக்கைகள் அவசியமாக உள்ளன.

எலன் ஜி. ஒய்ட், கையெழுத்துப் பிரதி 24, 1891
பதிவிறக்கு த கிரேட் கான்ட்ரவர்சி மற்றும் உதவி வளங்கள்

சுருக்கம்
உலகம் சிறப்பாக மாறிவருகிறதா, மோசமாக மாறிவருகிறதா? என்ன நினைக்கிறீர்கள்? இன்று பெரும்பாலான மக்கள் உலகம் மோசமாகிவருவதாக நம்புகிறார்கள். இது ஆச்சரியமாக இல்லை. இந்த உலகளாவிய அவநம்பிக்கைக்குக் காரணம் என்ன? மோசமான செய்திகளால் நிறைந்துள்ள இன்றைய கலாச்சாரத்தின் விளைவாக இருக்கலாம்; இந்தப் புத்தகத்தில் பூமியை நடுங்கவைக்கிற உண்மைகள் சொல்லப்படுகின்றன, அதை மனிதர் இயல்பாகவே அறிந்திருப்பதால் இவ்வாறு இருக்கலாம். எளிதில் புரிந்துகொள்ளமுடியாத ஏதோ ஒன்று பூமியில் தவறாக உள்ளது; அதைச் சரிசெய்ய நாம் சக்தியற்றவர்களாக இருக்கிறோம்.
மாபெரும் போராட்டம் எனும் இந்தப் புத்தகமானது மனிதருடைய சீரழிவின் தோற்றத்தை வெளிப்படுத்துகிறது; அதுமட்டுமல்லாமல், தொற்றுநோய்கள், ஆபத்துகள், ஊழல்கள், படுகொலைகள், குழப்பங்கள் ஆகியவற்றுக்குப் பின்பலத்தில் நடந்துவருகிற கடும் பூசல்களையும் வெளிப்படுத்துகிறது. தீமைக்குப் பின்னால் ஒரு நபர் உண்டு; நன்மைக்காகப் போராட ஒரு வெற்றிவீரர் உண்டு; பாவத்திற்கு முடிவு உண்டு என்பதை இந்த அற்புதமான புத்தகத்தில் கண்டுகொள்வீர்கள். இந்த உலகத்தின் முடிவுக்கும், வரவிருக்கும் மகிமையான உலகத்திற்கும் நீங்கள் ஆயத்தமாக விரும்பினால், நீங்கள் இந்த புத்தகத்தைப் படிக்க வேண்டும்.
மொழி:
அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டது